Header Ads

test

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி.

 எல்லப்பர் - மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28.04.2023) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் நா.கபிலன் (வயது 29) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆலயத்தில் இடம்பெறும் உற்சவ பூஜைக்கு ஆலயத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த போது ஆலயத்தின் கதவினுள் இருந்த வயரில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைபட்டமையால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


No comments