Header Ads

test

இழுத்து மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.

 இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 30ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படுவதாக அவர் தெரிவித்தார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடினாலும் நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளன. இதன் காரணமாக, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சிங்கபூரிடமிருந்து கடன் அடிப்படையில் கச்சாய் எண்ணெய் வாங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆறு கட்டங்களின் கீழ் அவற்றை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments