Header Ads

test

முல்லைத்தீவு மாவட்டத்தில் பேச்சுப் போட்டியில் நான்கு மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

 மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நடப்பாண்டிலிருந்து "தொழில் வழிகாட்டல் வாரத்தை" ஒக்டோபர்  04ம் திகதி தொடக்கம் 10ம் திகதிவரை நடாத்துவதற்கு  மனிதவலு  வேலை வாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை(தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே  நிகழ்நிலை(Online) முறையூடாக நாடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேவரஞ்சன் கோகுலறூபி, முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தழிழ்க் கலவன் பாடசாலை மாணவியான எம்.அபிசாயினி, குமுழமுனை மகாவித்தியாலய மாணவியான எஸ்.பவித்ரா, ஐயன்கன்குளம் மகா வித்தியாலய மாணவியான கணேஸ்குமார் தமிழினி ஆகிய மாணவிகளே இவ்வாறு தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments