Header Ads

test

இலங்கைக்கு வருகை தந்த சீனாவின் கரிம உர கப்பலை திருப்பி அனுப்பிய இலங்கை.

சீனாவில் இருந்து தரமற்ற கரிம உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த கப்பல் திரும்பியுள்ளது. அத்துடன் இலங்கை தரத்தின்படி உரத்தை வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்தார்.

உரத்தை இறக்குமதி செய்த நிறுவனம் உரம் தரமற்றது என்றும் அதை சரிசெய்த பிறகு அது மீண்டும் இறக்குமதி செய்யப்படும் என்றும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உரத்தையும் இலங்கை இறக்குமதி செய்யாது என்றும் அவர் தெரிவித்தார்.

மகா பருவம் ஒக்டோபர் 15 ஆம் திகதி அம்பாறையில் ஆரம்பமாகும். இந்த நோக்கத்திற்காக தேவையான கரிம உரம் தயாரிக்கப்பட்டது. உயிர் திரவ உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில்  இந்த மாத இறுதிக்குள் நைட்ரஜன் இறக்குமதி செய்யப்படும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் மஹா பருவத்தை செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.



No comments