Header Ads

test

கிளிநொச்சியில் வீசிய மினி சூறாவளியால் ஏற்பட்ட பலத்த சேதம்.

 கிளிநொச்சியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து என்பன பாதிப்படைந்துள்ளது.

கிளிநொச்சி மகாவித்தியாலய வளாகத்தில் காணப்பட்ட மரங்கள் சரிந்துள்ளதுடன், பாடசாலை தற்காலிக கொட்டகைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த மினி சூறாவளியால் வகுப்பறைக் கற்றல்ச் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், பாடசாலைக்கு  முன்பாகவிருந்த முதிர்ச்சியடைந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதயில் 2ம் கட்டை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக 4 கடைகளைக்கொண்ட கடைத்தொகுதி ஒன்றின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

கால்நடைப் பண்ணை ஒன்றின் கூரைத்தகடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments