Header Ads

test

ராஜபக்ச சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்.

 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.

இதனை வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இன்று(10.11.2023) அறிவித்துள்ளார்.

மேலும் அதே காலகட்டத்தில், ராஜபக்ச சகோதரர்களுக்கு மேலதிகமாக,  இன்று விதிக்கப்பட்ட தடைகளில் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்துள்ள தடைகள், இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அடுத்த படியாகும் என தெரிவித்துள்ளார்.


No comments