Header Ads

test

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

கடந்த ஆண்டு பொருளாதாரம் சரிந்ததால், அரசின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. எனவே அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்குகூட நிதியை தேடுவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த மாதம் நிதிப் பற்றாக்குறையால் மாதச் சமுர்த்திக் கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம். நிதிப் பற்றாக்குறை காரணமாக சமுர்த்திக் கொடுப்பனவுகள் தாமதப்படுத்தப்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பணம் செலுத்தப்படும், பெறுநர்கள் தாமதத்தை எதிர்பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு பொருளாதாரம் சரிந்ததால், அரசின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. எனவே அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்குக் கூட நிதியைத் தேடுவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.

தொடர்ந்து பணத்தை அச்சிட முடியவில்லை, இதனால் பணவீக்கம் மீண்டும் வேகமாக அதிகரிக்கும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக நாடு பணத்தை அச்சிடுவதற்கும் தடைகளை எதிர்நோக்கி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார். 


No comments