Header Ads

test

யாழில் மதுபான போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள்.

 யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நான்கு மாணவர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டதன் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நண்பகல் யாழ்ப்பாணம் பிறவுண் வீதி ஆலய கேணியடியில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர், மாணவர் ஒருவர் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்தனர்.

ஏனைய மூவரும் மதுபானம் அருந்தியவாறு இருந்த நிலையில் குறித்த நால்வரையும் கைது செய்து யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு வருகை தந்ததாகவும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபானம் அருந்தியதாகவும் விசாரணையின் போது  தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி பயிலும் 17, 18 வயதுடையவர்கள் என விசாரணையில் கண்டறியப்பட்டது.

மாணவர்களின் பெற்றோரை அழைத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பிள்ளைகள் தொடர்பில் கண்காணிப்பு இல்லையா என எச்சரித்ததுடன் பாடசாலையில் பயிலும் மாணவர்களை நீதிமன்றில் முற்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் பாதகநிலை தொடர்பில் எடுத்துரைத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எச்சரித்து பெற்றோரிடம் மாணவர்களை ஒப்படைத்துள்ளார்.


No comments