Header Ads

test

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

 கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு முதல் ஐந்து தடவைகளுக்கு மேல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளியை எரிபொருள் இல்லை எனத் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

பலமுறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்ட நிலை! | Disabled Person Went The Fuel Station Many Times

இவர் பாவிக்கும் மோட்டார் சைக்கிள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காய் இரண்டு மோட்டார் சைக்கிளை வெட்டியே செய்கிறார்கள் இப்படியான மோட்டார் சைக்கிள்களுக்கு Chassis no மற்றும் வருமான உரிம இலக்கம் என்பன கிடையாது.

பலமுறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்ட நிலை! | Disabled Person Went The Fuel Station Many Times

மேலும், இவர் ஒரு மாற்றுத்திறனாளியாக இருக்கின்றபோதும் கிளிநொச்சி மாவட்டம் அறிந்த ஒரு சுய முயற்சியாளன் என முகநூலில் Nitharsan Varatharajah இதனை பதிவிட்டுள்ளார்.


No comments