Header Ads

test

நீண்டகாலமாக புணரமைக்கப்படாத நாகதேவன் துறை வீதி - கடும் விசனம் தெரிவித்த கடற்தொழிலாளர்கள்.

 கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட நாகதேவன் துறை செல்வதற்கான பாதை இதுவரை புணரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் கடலுக்குச் செல்ல முடியாத நிலையை எதிர்கொள்வதாக ஞானிமடம் கடற்தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நாகதேவன் துறையானது நீண்ட காலம் புணரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

அத்துடன் இறங்கு துறைக்கான பிரதான வீதியானது நீண்ட காலமாக புணரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

கடந்த 1990ம் ஆண்டுக்குப் பின்னர் இத்துறையும், துறைக்கு செல்லும் குறித்த வீதியும் புனரமைக்கப்படாத நிலை காணப்பட்டது.

கடந்த1993 ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்தம் காரணமாகவும் மோசமாக சேதமடைந்ததுடன், 2012ஆம் ஆண்டுவரையிலும் தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பகுதியாகவும் காணப்பட்டுள்ளது.

தற்போது இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடல் பெருக்கு காலங்களிலும், ஏனைய காலங்களிலும் கடற்தொழிலுக்கு செல்வதில்  பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் நீளமான குறித்த வீதியையும் இறங்குதுறையினையும் புணரமைத்து தருமாறு பிரதேச கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments