Header Ads

test

முல்லைத்தீவில் பொது மக்களின் காணிகளை சுவீகரிக்க முற்பட்ட கடற்படை - தடுத்து நிறுத்திய பொது மக்கள்.

 முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்ற வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும்.

தமிழர் பகுதியில் மீண்டும் காணி  சுவீகரிக்க நடவடிக்கை ! எதிர்த்து நிற்கும் பொதுமக்கள் | Steps To Reclaim Land In The Tamil Area

இதில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவந்தன.

  எனினும் பொதுமக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அளவீடு செய்து காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் மீண்டும் காணி  சுவீகரிக்க நடவடிக்கை ! எதிர்த்து நிற்கும் பொதுமக்கள் | Steps To Reclaim Land In The Tamil Area

இதனை அறிந்து அங்கு சென்ற போராட்டக்காரர்கள் வீதியை மறித்து, தங்கள் நிலங்களை அளவு செய்வதற்காக முகாமிற்குள் அதிகாரிகளை நுழைய விடாமல் தடுத்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments