Header Ads

test

அரிசி விநியோகம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

இறக்குமதி செய்யப்படும் அரிசியை தனியார் பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் பதிவொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1 கிலோகிராம் நாட்டு அரிசி ரூ.145 ஆகவும், ஒரு கிலோ சம்பா அரிசி ரூ. 175க்கும் விற்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுவரையில் சதொச விற்பனை நிலையங்களினூடாக மாத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்களை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஏனைய பல்பொருள் அங்காடிகள் ஊடாகவும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வாடிக்கையாளருக்கு அதிகபட்சமாக 5 கிலோ அளவுக்கு விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.   

It is decided to release a stock of imported rice which is sold only at Lanka Sathosa to all supermarket chains within next week. The maximum retail price is as follows;

1 Kg Nadu rice - Rs 145.00

1 Kg Samba rice - Rs 175.00

A maximum of 5 kgs can be obtained by a customer pic.twitter.com/ig9CCq5oe5

— Shehan Semasinghe (@ShehanSema) May 1, 2022


No comments