Header Ads

test

கோவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான அறிவித்தல்.

கோவிட் வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளும் செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கோவிட் தடுப்பூசியின் 2 வது பூஸ்டர் அல்லது 4 வது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள்.

அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த தடுப்பூசி முக்கியமாக பரிந்துரைக்கப்படுகின்றது என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2 வது பூஸ்டரை தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள வைத்தியசாலை அல்லது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் தினுக குருகே மேலும் தெரிவித்துள்ளார்


.

No comments