Header Ads

test

இன்று காலை மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய துயரச் சம்பவம்.

   மட்டக்களப்பில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இன்றுகாலை சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீதிக்கு அருகிலேயே இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு இன்று காலை 6 மணியளவில் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

எனினும் குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.



1 comment:

  1. The Eight-Wheel Classic - TITIAN Arts
    The eight-wheel classic bicycle is available in six sizes. worrione The Bicycle Wheel ventureberg.com/ is a classic bicycle made in USA, but there are goyangfc three mens titanium wedding bands variations in 출장안마

    ReplyDelete