Header Ads

test

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை பகுதியில் மாற்றமடைந்துள்ள மீனவர் போராட்டம்.

 தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை  தடுத்து நிறுத்துமாறு கோரி , யாழ் மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் அவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி,அது குறித்து எழுத்து  மூலமான கடித்ததை தருமாறு கோரியும் யாழ் மீனவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளது. எனினும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை நேற்றைய தினம் போராட்ட இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்த நிலையில், அங்கு போராட்ட காரர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகைலையடுத்து போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.







No comments