Header Ads

test

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் தமிழ் துறையை நிறுவ தமிழ்க்குடில் வழங்கும் ஒன்பதாவது பன்னாட்டு பரப்புரை - "தமிழே தமிழரின் முகவரி".

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் தமிழ் துறையை நிறுவ தமிழ்க்குடில் வழங்கும் ஒன்பதாவது பன்னாட்டு பரப்புரை "தமிழே தமிழரின் முகவரி" என்ற தொனிப்பொருளின் கீழ்,தமிழரின் கலை,கலாச்சாரம்,பண்பாடு மற்றும் மொழி போன்றவற்றை அழிந்து போகாமல் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நிகழ்வில் வேறுபட்ட தலைப்பின் கீழ் பேசுவதற்காக ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீ சட்டத்தரணி,இறைபிள்ளை கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் வாழ்நாள் தொண்டன்,கிருபாகரன் கீர்த்திகன் பண்ணை முகாமையாளர் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு,அருண்குமார் திருநாவுக்கரசு வணிகவியல் இளவல்,தர்மராசா மைதிலி முன்பள்ளி ஆசிரியர்,ஈழத்து எழுத்தாளர் - கவிஞர் வவுனியூர் ரஜீவன் தமிழ்நாதம் ஊடக முகாமைத்துவ பணிப்பாளர்,

ஆகியோருடன் - 

கலையரசி கன்யூட்  உளவியல் ஆலோசகர்,புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குனர் தமிழின உணர்வாளர்,திரு.அகணி சுரேஸ் கவிஞர் எழுத்தாளர் கனடா,இரத்தினசாமி இரமேசுவரன் யேர்மனி ஒருங்கிணைப்பாளர்  நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்றவர்களும் கலந்துகொள்கின்றனர்.

மற்றும் இந் நிகழ்வில் திருமதி சயிந்திகா சுஜீந்திரன் பொறுப்பாளர் சமூகநலன் பிரிவு தமிழ்க்குடில் ஒன்றியம்,ஸ்ரிவன் புஸ்பராஜா.க மூத்த கப்பல் கட்டும் துறைப் பொறியியலாளர்,பேராசிரியர் இராமநாதன் சிறி ரஞ்சன் கனடா மனிரோபா பல்கலைக்கழகம்,ஆகியோருடன்  ச.சத்தியமூர்த்தி பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்  ஐக்கிய இராச்சிய தமிழ்துறை, போன்றவர்கள் ZOOM ID 882 3310 2574 எனும் இலக்கித்தினூடாக இன்று(30) ஞாயிற்றுக் கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பல நாடுகளிலும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் மற்றும் புத்தியீவிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments