Header Ads

test

கொழும்பில் அதிரடியாக குவிக்கப்பட்டுள்ள முப்படைகள்.

 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மாநகரம் மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி 21 வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அந்த வீதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அழைக்கப்பட்ட அனைத்து விருந்தினர்களும் அழைப்பிதழ் அட்டையுடன் வழங்கப்பட்டுள்ள பார்க்கிங் லேபிளுடன் காலை 7.30 மணிக்கு முன்னதாக வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பெருமைமிக்க 74 வது சுதந்திர தின அணிவகுப்பை முன்னிட்டு இவ்வருடம் கடற்படையினரின் 25 சல்யூட் ஷாட்கள் மற்றும் விமானப்படையினரால் விமானக் கண்காட்சி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, விழா நடைபெறும் பகுதியில்  நாடு சார்பில் காலி முகத்திடலில் இருந்து இலங்கை கஜபாகு கப்பலில் இருந்து 25 சல்யூட் ஷாட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய விழாவில் முப்படைகளுடன் காலாட்படையும் இணைந்து கொள்ளும், இதில் 26 விமானங்கள் மற்றும் 50 விமானிகளின் அணிவகுப்பு வான்வெளியில் இருந்து பெருமை சேர்க்கும் என அறிய முடிகின்றது.


No comments