Header Ads

test

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இரு நாடுகளிடம் கடன் கோரும் இலங்கை.

  அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் கடன் தொகைகள் கோரப்பட்டுள்ளன.

வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இரண்டு நாடுகளினதும் உயர்ஸ்தானிகராலயங்களின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடன் பெறுவது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்தால் கடன் அடிப்படையில் குறித்த நாடுகளிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்தே அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களில் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments