Header Ads

test

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம்.

 ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி இதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் செந்தில் தொண்டமான் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசேர தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், செயலணியின் உறுப்பினர்களாக 4 முஸ்லிம்கள் மற்றும் 9 சிங்களவர்களின் பெயர்கள் வர்த்தமானாயின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆளும் கட்சியிலுள்ள தமிழ் பங்காளி கட்சிகள் இதற்கான அனுமதியை கோரிய பின்னணியில், ஜனாதிபதி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments