Header Ads

test

மாற்றம் பெற்றது பேஸ்புக்கின் பெயர்.

 முகநூல் (Facebook) நிறுவனம் தனது பெயரை மெட்டா (Meta) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து தற்போது முகநூலின் (Facebook) பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு Meta என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் முகநூல் (Facebook) ஆண்டு கூட்டத்தில் பேசுகையில், சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஏற்கனவே உள்ள Facebook, Instagram, Messenger, WhatsApp செயலிகள் முன்னர் உள்ளது போலவே அதே பெயர்களிலேயே செயற்படும் என்றும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.


No comments