Header Ads

test

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

 பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட கொரோனா தடுப்பூசி அட்டை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் முடிவு மேலும் தாமதமாகலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ் அளவுகளும் பெறப்பட்ட அட்டை செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பொது இடங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

எனினும், இவ்வாறான சட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


No comments