Header Ads

test

திருமலைக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் நாமல்.

 இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (22) திருகோணமலைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அமைச்சர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது .

இதன்படி, காலை 10 மணிக்கு திரியாய் பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகள் அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதோடு, காலை10:40 மணிக்கு மொரவெவ நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தை மேற்பார்வை செய்யவுள்ளார்.

பின்னர் குச்சவெளி சாந்திபுரம் யானை வேலிக்கான அடிக்கல் நிகழ்வு நடைபெற உள்ளதோடு, காலை 11. 45 மணிக்கு குச்சவெளி நாவற்சோலை கரப்பந்து விளையாட்டு மைதானம் திறந்து வைத்தல் மற்றும் கொங்ரீட் வீடமைப்பு தொகுதி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

மாலை திருகோணமலையிலுள்ள டொக்கியாட் துறை மேற்பார்வை செய்யப்படவுள்ளதோடு, பிறகு வெள்ளை மணல் கரப்பந்து, கந்தளாய், சேருவில, வெருகல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரப்பந்து விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படவுள்ளதோடு, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழும் நடைபெற உள்ளது.


No comments