Header Ads

test

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா எழுந்துள்ள புதிய பிரச்சினை.

 அடுத்த ஒரு மாதத்திற்கு நாட்டில் எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருள் கொள்வனவுக்காக வெளிநாட்டு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) களஞ்சியத்தில் பராமரிப்பது இயல்பானது என்றும் தனிமைப்படுத்தலுடன் எரிபொருள் நுகர்வு குறைந்த நிலையில் தன்மைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் நாட்டில் எரிபொருள் நுகர்வு மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறினார். எனினும் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும் எதிர்காலத்தில் இது போன்ற நிலைமை ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வாங்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், எரிபொருள் பற்றாக்குறை குறித்த அச்சம் மீண்டும் தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


No comments