Header Ads

test

பிறந்து மூன்றே நாட்களான சிசு கொவிட் தொற்றால் மரணம்.

 இலங்கையில் பிறந்து மூன்றே நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

களுத்துறை – வெலிபென்ன, பெலிவத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த சிசுவே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாகொடை வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றதன் பின் வீடு திரும்பிய நிலையில் குறித்த குழந்தை உயிரிழந்தது.

இதேவேளை உயிரிழந்த சிசு , பெற்றோருக்குப் பிறந்த முதல் குழந்தை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments