Header Ads

test

இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

 இலங்கையில் கடந்த 05 வருட காலப்பகுதியில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கொழும்பு டாம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட தலையற்ற பெண்தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின் ஆரம்பத்தில் பொலிஸார், உடலை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களை நாடியிருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் சுமார் 200ற்கும் அதிகமான அழைப்புக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.

இந்த நிலையில் பொலிஸாரின் பதிவுகளில் குறிப்பாக 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 23,204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றி முறைப்பாடுகள் குவிந்திருக்கின்றன.

அதற்கமைய 2020ஆம் ஆண்டில் 3716 முறைப்பாடுகள் பதிவாகியிருக்கின்றன.

2019ஆம் ஆண்டில் 3425 முறைப்பாடுகளும், 2018ஆம் ஆண்டில் 3325 முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

2017ஆம் ஆண்டில் 3617 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், 2016ஆம் ஆண்டில் 4420 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டிலேயே அதிக முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவை 4701ஆக காணப்படுகின்றன.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சில முறைப்பாடுகள் காணாமல் போனோர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பொலிஸாரின் பதிவுப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.



No comments