Header Ads

test

ஜனாதிபதித் தேர்தல் வர்தமானி தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு.!!!

ஜனாதிபதித் தேர்தல் வர்தமானி தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு.!!!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலி மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மெத்சிறி டி சில்வாவினால் உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆறு வருடங்களுக்கான பதவிக் காலத்திற்காகவே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்றதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ஐந்து வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணனாது எனவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மனுவை உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments