Header Ads

test

காட்டு யானை தாக்கி கிளிநொச்சியில் ஒருவர் பலி.!!!

காட்டு யானை தாக்கி கிளிநொச்சியில் ஒருவர் பலி.!!!

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (03) கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 74 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் முரசுமோட்டை 03 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள உப்புக் காட்டுக்குள் சிங்கள மக்களால் 10 ற்கும் மேற்பட்ட யானைகள் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு விடப்பட்ட யானைகள் தினமும் மக்கள் குடியிருப்புக்கள், வயல்வெளிகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்திச் செல்கின்றது.

தற்போது வேளாண்மை செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் குறித்த வயோதிபரின் வீட்டிற்குள் விதைப்புக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லை சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை, நாய்களின் சத்தம் கேட்டு எழுந்த முதியவர் வீட்டுக்குள் யானை நிற்பதைக் கண்டு துரத்துவதற்கு முயற்சித்த நிலையிலேயே யானை மிதித்துக்கொண்றுள்ளது.

அதாவது யானைகள் கொண்டு வரப்பட்டு விடப்பட்ட காடு உப்புக் காடு என்பதால் அதில் யானைகள் தங்காது என்று அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறித்த பிரதேச வாசிகள் கோட்டுக்கொண்டுள்ளனர்.

No comments