இலங்கையில் கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தப்போகும் குமுதினி கோபாலகிருஷ்ணன்.
நாட்டில் பதிவாகவுள்ள கின்னஸ்(Guinness) உலக சாதனை. முதன்முறையாக கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்று இடம்பெறுவதை, நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கைவாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது.
இலங்கையில் இதுபோல் ஒரு சாதனை ஒருபோதும் இடம்பெறவில்லை என்பதை அழுத்தமாக குறிப்பிடவேண்டும்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது நீண்ட கால முயற்சியின் பலனாக கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
இந் நிகழ்வானது, எதிர்வரும் 01.04.2026 அன்று மாலை 6.00க்கு A-09 வீதி திருமுறுகண்டியில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டவரும் இவ்வாறான உலக சாதனைகளை எதிர்காலத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே இலங்கையில் இச் சாதனை பாதிவாகவுள்ளது.
இவரது சாதனை வெற்றிபெற எமது வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதில் பெருமிதம் அடைகின்றோம்.

Post a Comment