Header Ads

test

இலங்கையிலிருந்து ஈரானுக்கு அனுப்பிவைத்த உடலங்கள்.

 ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதில் வழங்கப்படும்" என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், IRIS Dena கப்பலின் பெயரும் அதன் பணியாளர்களின் உயிர் தியாகமும், ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் கடற்படை சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கும் உறுதியான தீர்மானத்துடன் செயற்படுவதாக ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி வலியுறுத்தினார்.

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரானியர்களின் சடலங்கள் விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று (13) இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.



No comments