Header Ads

test

ஆறு வயதுடைய பாடசாலை மாணவனைத் தாக்கிய பதினைந்து வயதான மாணவன்.

 மாத்தறையில் ஹக்மனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் 6 வயதுடைய பாடசாலை மாணவனைத் தாக்க காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே காயமடைந்துள்ளார். 6 வயதுடைய பாடசாலை மாணவன் தினமும் தனது தந்தையுடன் பாடசாலை வீதிக்கு அருகில் உள்ள விகாரைக்கு சென்று பின்னர் அங்கிருந்து 15 வயதுடைய பாடசாலை மாணவனுடன் பாடசாலைக்கு செல்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, 6 வயதுடைய பாடசாலை மாணவன் வழமைப்போல தனது தந்தையுடன் பாடசாலை வீதிக்கு அருகில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார். பின்னர் தந்தை மாணவனை விகாரையில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதன்போது 15 வயதுடைய பாடசாலை மாணவன் 6 வயதுடைய பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திவிட்டு அவரை விகாரைக்கு பின்னால் அமைந்துள்ள காணியில் விட்டுச் சென்றுள்ளார்.

மாணவனின் தந்தை மகனை காணவில்லை என ஹக்மனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாடசாலை வீதிக்கு அருகில் உள்ள விகாரையின் பின்னர் அமைந்துள்ள காணியில் காயமடைந்த நிலையில் மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான 15 வயதுடைய பாடசாலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஹக்மனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments