Header Ads

test

37 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை.

 கண்டி நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் 37 பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதன் காரணமாகவே பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments