Header Ads

test

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை நேற்று (17) வெளியிட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுப்பாவனையின் போதானது,

👉0 – 30 அலகுகளுக்கு 29%

👉31 – 60 அலகுகளுக்கு 28%

👉61 – 90 அலகுகளுக்கு 19%

👉91 – 180 அலகுகளுக்கு 18%

👉180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12%

அரச நிறுவனங்களுக்கு 11%

ஹோட்டல் துறைக்கு 31%

வழிபாட்டுத்தலங்களுக்கு 21%

தொழிற்துறைக்கு 30%

வீதி விளக்குகளுக்கு 11%

மொத்த விலைக் குறைப்பு 20% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments