Header Ads

test

எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து.

 எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கனிய வள கூட்டுத்தாபனம் 3 பில்லியன் டொலர் கடனில் இயங்குகிறது. அந்த கடன் அனைத்தையும் திறைசேரி பொறுப்பேற்றுள்ளது.

விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் கடனை செலுத்துவதற்கான கட்டணம் அறவிடப்படுகிறது.

கடன் செலுத்தி நிறைவுறுத்தப்பட்டவுடனேயே எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


No comments