Header Ads

test

திருகோணமலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மூவர்.

 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் இன்றையதினம் (19-01-2025) இடம்பெற்றுள்ளது.

குறித்த வேன், சேருவில பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்தபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறிய மரம் ஒன்றுடன் மோதி வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த பேருவளை பகுதியைச் சேர்ந்த மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.





No comments