Header Ads

test

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் விபத்தில் பலர் படுகாயம்.

 குருணாகல் - கொழும்பு பிரதான வீதி பொல்கஹவளை நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments