பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.
சீரற்ற காலநிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் இன்று (20) மூடப்பட்டிருந்த அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (21) திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை முதல் வழமை போன்று நடைபெறும் என இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (20-01-2025) மூடப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment