கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட வெள்ள அனர்த்த ஒத்திகை.
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்த ஒத்திகை நேற்றைய தினம்(19) வேள்ட் விசன்(World vision) நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றின் ஆதரவோடு குறித்த வெள்ள முன்னாயத்த ஒத்திகை ஸ்கந்தபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மணியங்குளத்தை மையப்படுத்தி மணியங்குளத்தின் கீழ் உள்ள மக்கள், மணியங்குளம் உடைப்பெடுத்தால் எவ்வாறு முன்னாயுத்தமாக செயற்பட வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டனர்.
குறித்த அனர்த்த முன்னாயத்த ஒத்திகையில் இராணுவத்தினர், பொலிசார், பிரதேச சபையினர், சுகாதார துறையினர் என அனர்த்தத்தின் போது செயற்படும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.








Post a Comment