Header Ads

test

வடக்கு - கிழக்கில் வெடிக்கப் போகும் பாரிய போராட்டம்.

 வடக்கு - கிழக்கின் மன்னார் மற்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவி அ.அமலநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (27.08.2023) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமாகும்.

கடந்த காலத்தில் நாங்கள் இத்தினத்தில் வடக்கு - கிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த தடவையும் அதேபோன்று வடக்கில் மன்னாரிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இந்த பேரணிகளை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து எமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்காத நிலையிலேயே நாங்கள் இன்று சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி நிற்கின்றோம்.

இனிவரும் காலத்திலும் இந்த சர்வதேச நீதிப் பொறிமுறையினை கோரியே போராட்டத்தினை நடாத்தப்போகின்றோம்.

அதே போன்று இலங்கையில் இவ்வாறான கடத்தல்கள் எதிர்காலத்தில் நடக்காது என்ற உறுதிமொழியை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும். இதனையும் ஒரு கோரிக்கையாக கொண்டே பேரணியை முன்னெடுக்கவுள்ளோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments