Header Ads

test

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறை.

 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய நடைமுறை விதிகள் தொடர்பில் வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில், பொலிஸார் அல்லது பொலிஸ் சேவைக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொதுமக்கள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அலுவலகத்திலும் அல்லது எந்தவொரு மாகாண அலுவலகத்திலும் முறைப்பாடுகளை செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பொலிஸ் நிலையம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளின் அடையாளம் போன்ற விபரங்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த முறைப்பாடுகள், சம்பந்தப்பட்ட தரப்பினரால் எந்தவித தாமதமும் இன்றி ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

மேலும் பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக, விசாரணை அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தேசிய பொலிஸ்  ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க ஆணைக்குழு முயற்சிக்க வேண்டும் என கூறப்படட்டுள்ளது.

மேலும், குற்றத்திற்கான ஆதாரம் கண்டறியப்பட்டால், தேவையான நடவடிக்கைக்காக இந்த விவகாரம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments