Header Ads

test

அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்.

 அடுத்த வாரம் இலங்கைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (Dr.s. Jaishankar) வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பயணம் இடம்பெறுகிறது.

இலங்கைக்கு வரவுள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்! ரணில் தகவல் | Minister Jaishankar Come To Sri Lanka Ranil Inform

2.5 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்குவதற்காக இலங்கை பெற்ற கடனை மறுசீரமைக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் விரும்புகிறது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியுமென ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரவுள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்! ரணில் தகவல் | Minister Jaishankar Come To Sri Lanka Ranil Inform

இதனையடுத்து இலாபமற்ற அரசாங்க நிறுவனங்களின் மறுசீரமைப்பிலிருந்து 3 பில்லியன் டொலர்களைச் சேர்த்த பிறகு, மொத்தம் 10 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும்.

இது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாட்டை அதன் துன்பத்திலிருந்து வெளியே கொண்டு வரவும் உதவும் என்று ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரவுள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்! ரணில் தகவல் | Minister Jaishankar Come To Sri Lanka Ranil Inform

பெண்கள் தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின், பெண் தொழில் முனைவோரை மதிப்பிடும் வகையில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் எமக்கு உதவ தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன. ஏற்கனவே இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரவுள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்! ரணில் தகவல் | Minister Jaishankar Come To Sri Lanka Ranil Inform

சமீபத்தில் சீனா எக்சிம் வங்கியுடனான கலந்துரையாடல்களின்படி, சீனத் தரப்பு விரைவாகச் செல்ல இணங்கியுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

No comments