Header Ads

test

இரு நபர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட முல்லைத்தீவு சிறுமி.

  முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் கடந்த 25ஆம் திகதியன்று கிளிநொச்சியில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்புக்கு முகமறியாதவர்களின் வாகனத்தில் பயணித்துள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி செல்வதாக தெரிவித்த இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவேளை, அப்பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இதனையடுத்து சிறுமி வீதியில் விடப்பட்ட போது, மற்றுமொருவர் சிறுமியியை ஏற்றிச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இரவு முழுவதும் வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற சிறுமி, சனிக்கிழமை காலை கிளிநொச்சி சென்று, பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியுள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாரால் சிறுமி மீட்கப்பட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 36 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு இளைஞனை தேடிவருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.


No comments