Header Ads

test

நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு போராட்டம்.

 நாடளாவிய ரீதியில் இன்றும், நாளையும் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

வரவு - செலவு திட்டத்தை தோற்கடிக்க வலியுறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

துறைமுகம், சுகாதாரம், வர்த்தக வலயங்கள், எரிபொருள் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனம், விருந்தகம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க கூறுகையில், இந்த பாதீட்டினூடாக அரசாங்கம் பல்வேறு துறைகளை தனியார் மயப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஏனைய நாடுகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு சகல துறையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 



No comments