வெகு விமர்சையாக இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டு விழா - மு/நட்டாங்கண்டல் அ.க.பாடசாலை.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதற்கு அமைவாக பாடசாலைகள் தோறும் மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது.
இதனூடாக ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது ஆய்வுகள் மூலம் புலனாகிறது.
இதற்கமைவாக,முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வொன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த நிகழ்வானது 16.09.2022 அன்று பாடசாலை முதல்வரின் தலைமையில் இடம்பெற்றதுடன்,
மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்,கிராம அலுவலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் பெற்றோராசிரியர் சங்கத்தினரும் கலந்துகொண்டதுடன் பெற்றோர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் இந் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இப் பாடசாலையில் எதிர்வரும் வாரத்தில் மரநடுகை விழாவும்,நவராத்திரி பூஜையை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் பல்வேறுபட்ட போட்டி நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










Post a Comment