Header Ads

test

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கம்.

 பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், தடுப்புக் கட்டளைகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பு விடயத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத தடை சட்டத்தின் துஷ்பிரயோகம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் பற்றிய தெளிவான வரையறை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடுகளின் நியாயமான வெளிப்பாடுகளை நசுக்குவதற்கும், அமைதியான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துபவர்களைக் குறிவைப்பதற்கும், இந்த சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


No comments