Header Ads

test

மனோகணேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

 நாடாளுமன்றத்தில் இன்று (12) வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மனோ கணேஷன் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

அவர் கருத்து தெரிவிக்கையில் பேஸ்புக் பதிவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு அநாவசியமான கைதுகளும் அச்சுறுத்தல்களும் கொழும்பில் இடம்பெற்று வருகின்றன. உடனடியாக இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேஷன் வெளியிட்ட பகிர் கருத்துக்கள் | Share Comments Posted By Mano Ganesan

அத்தோடு கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை வைத்துக் கொண்டு பேஸ்புக் மூலம் படங்கள், தகவல்களை திரட்டி கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் அநீதியான முறையில் கைது செய்யப்படுகிறார்கள்.

அவ்வாறான இளைஞர்களின் விபரங்கள் பெறப்பட்டு அவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

இதுவே பொலிஸாரின் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.அது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments