Header Ads

test

கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை - அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை.

 கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பின்னர் ஏற்பட்ட கோவிட் - 19 பெருந்தொற்று நிலைமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் மோசமடைந்து வருவதுடன் பொதுவாக அனைத்து துறைகள் மீதும் நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

இந்நிலைமை ஒட்டுமொத்த சனத்தொகையில் 30% வீதத்தினராகிய விவசாயிகளுக்கு தாங்கிக் கொள்வதற்கு சிரமமாக இருப்பதுடன், இரசாயன உரப் பாவனைக்குப் பதிலாக இயற்கை உரப் பாவனையை அறிமுகப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் விவசாயிகள் மேலும் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் நெற்பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளால் பெறப்பட்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ளதுடன், குறித்த கடன்களை அறவிட முடியா கடனாக வங்கிகள் வகைப்படுத்தியுள்ளன.

அதனால் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான கடன்தொயையைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகமான விவசாயிகள் தகைமையற்றவர்களாவதற்கு வாய்ப்புள்ளமையால் அரச தலையீட்டினால் அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது அத்தியாவசியமாகவுள்ளது.

அதற்கமைய இரண்டு ஹெக்ரயார் அல்லது அதற்குக் குறைவான காணியில் நெற்செய்கைக்காக அரச வங்கியிலிருந்து கடன் பெறப்பட்டு தற்போது மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ள ஆரம்ப கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்காக நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


No comments