Header Ads

test

இந்தியாவில் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியாக தெரிவு.

 இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக பாஜக கூட்டணி வேட்பாளர்  திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இவர் இரண்டாவது பெண் ஜனாதிபதியாகவும், முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதி என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 18 ஆம் திகதி இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியான நிலையில், 5,77,777 வாக்குகளை பெற்று திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவில் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியாக தெரிவு | India S First Tribal Woman Elected President

இதனை தொடர்ந்து திரௌபதி முர்முவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில்,திரௌபதி முர்மு புதிய குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ளார்.



No comments