Header Ads

test

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது.

 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே அதிகாலை வேளையில் இவர்கள் கைதாகியுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 453 பேர் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயல்வோரிடம் இருந்து 2 இலட்சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரையான பணத்தை ஆட்கடத்தல்காரர்கள் பெற்றுக் கெள்கின்றனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆட்கடத்தல்காரர்கள் பழுதடைந்த படகுகளையும் உடைந்த படகுகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்துகின்றனர் என்றும், இதன் மூலம் உயிராபத்துக்கள் அதிகம் ஏற்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்களுக்கு 1 முதல் 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.



No comments