Header Ads

test

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட தேசபந்து தென்னகோன்.

 கோட்டாகோகம தாக்குதல் சம்பங்கள் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் அண்மையில் ஆணைக்குழுவில் முன்னிலையானபோது, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அழைக்கப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; தலைவி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில்

தேசபந்து தென்னகோன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில்

இதேவேளை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவில் இருந்து சுதேஷ் நந்திமால் மற்றும் சட்டத்தரணி சேனக பெரேரா ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை, முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை, மனித உரிமை ஆணையத்தில் முன்னிலையான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் மற்றுமொரு ஆணையாளரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில்

வடரேகா திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்து சிறைக்கைதிகள், கடந்த மே மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மைனாகோகம மற்றும் கோட்டகோகம போராட்டத் தளங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்குவதற்கு அவர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில்


No comments