Header Ads

test

வவுனியாவில் இரவோடிரவாக இடம் பெறுவது என்ன - விசனம் தெரிவித்துள்ள பிரதேசவாசிகள்.

 ஹொரவப் பொத்தானை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய காலசார மண்டபத்தின் சுற்று மதில் நகரசபையின் அனுமதியின்றி இரவோடிரவாக.      அமைக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட ஹொரவப்பொத்தானை வீதியில் இஸ்லாமிய கலாசார மண்டபம் அமைந்துள்ளது. இஸ்லாமிய கலாசார மண்டபம் வவுனியா குளத்தின் நீரேந்துப் பகுதிக்கு செல்லும் வாய்காலை அண்மித்ததாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கலாச்சார மண்டபதிற்கான சுற்று மதில்களை அப் பகுதியில் கழிவு நீர் வடிந்து செல்லும் வாய்கால் ஊடாக அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மதில் கட்டுமாண நடவடிக்கைக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்காத நிலையில், புனித நோன்புக் காலத்தில் இரவிரவாக குறித்த கட்டுமாணப் பணிகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களும் ஒற்றுமையாக காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அனுமதியின்றி இரவிரவாக இஸ்லாமிய கலாசார நிலைய நிர்வாகத்தினர் கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் நகரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    


No comments